LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் இரண்டாக பிரிப்பு

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் இரண்டாக பிரிப்பு: நவ. 15-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
********************************
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் டெர்மினல் 1, டெர்மினல் 4 என இரண்டாக பிரிக்கப்பட்டு, நவ. 15-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தை, 2.21 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.2,467 கோடி திட்டத்தில் இரண்டு கட்டங்களாக கட்டுவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த 2018-ம் ஆண்டில் முடிவு செய்து பணிகளை தொடங்கியது. அதில் முதல் கட்ட பணி, 1.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.1,260 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது.
******************************
இந்த ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், டெர்மினல் 2-ஐ (டி 2) கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். புதிய முனையத்தில் விமான சேவை கடந்த ஜூலை 7-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே சர்வதேச முனையமாக செயல்பட்டுக் கொண்டிருந்த டெர்மினல் 3, 4 ஆகியவை முழுவதுமாக மூடப்பட்டன. டெர்மினல் மூன்றை இடிக்கும் பணி நடக்கிறது. அந்த பணி முடிந்ததும், விமான நிலைய இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளன.
****************************
அறிவிப்பு பலகைகள்
************************
பழைய சர்வதேச முனையத்தின் டெர்மினல் 4 நல்ல நிலையில் இருப்பதால், அதை இடிக்காமல் கூடுதல் உள்நாட்டு விமான முனையமாக பயன்படுத்த, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, சர்வதேச முனையமாக இருந்த, டெர்மினல் 4-ஐ, உள்நாட்டு முனையமாக மாற்றி அமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, நவ. 15-ம் தேதி இந்த புதிய உள்நாட்டு முனையம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4-ல் சோதனை அடிப்படையில் விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது போன்றவை நடைபெறவுள்ளன.
**************************************
எந்த விமானங்கள் எந்த டெர்மினலில் இருந்து புறப்படும் என்பது பற்றிய அறிவிப்பு பலகைகள், பயணிகள் வசதிக்காக அடுத்தஓரிரு தினங்களில் அமைக்கப்படவுள்ளன. சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 1, டெர்மினல் 4 என்று இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதால், கூடுதல் இடவசதியும் கிடைக்கும். கூடுதல் விமான சேவைகள் இயக்க முடியும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

by Kumar   on 13 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.