LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

எனைத்தானும் நல்லவை கேட்க : 6- குறலோடு உறவாடு - கவிஞர் மதுரை சு.பெ. பாபாராஜ் - தனிமனித ஒழுக்கம் தலைநிமிர வைக்கும்

எனைத்தானும் நல்லவை கேட்க : 6- குறலோடு உறவாடு - கவிஞர் மதுரை சு.பெ. பாபாராஜ் - தனிமனித ஒழுக்கம் தலைநிமிர வைக்கும்

அறிமுகம்:

            மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட திரு. சு.பெ. பாபா ராஜ் அவர்கள் சென்னையில் வசித்து வருகிறார். திருக்குறளுக்காக மிகப்பெரும் பணியைச் சத்தமில்லாமல் ஆற்றிக் கொண்டிருக்கிறார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் புலமை வாய்ந்தவர். அடிப்படையிலேயே கவிதை எழுதுவதில் இவருக்கு ஆர்வம் அதிகம். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது இவருக்குத் தமிழ் மொழி மீதான ஆர்வம் இன்னும் அதிகமாக ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.

திருக்குறள் பணிகள்:

            திருக்குறள் இரண்டடி வெண்பாவால் ஆனது. அவற்றை நான்கடி வெண்பாக்களால் எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும் படி மாற்று வடிவம் கொடுத்துள்ளார். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களையும் தனித்தனியே நான்கடி வெண்பாக்களாக எழுதி புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்.

            குழந்தைகள் விரும்பும் வண்ணம் 133 அதிகாரங்களையும் ஒவ்வொரு அதிகாரமாகச் சுருக்கி குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் தாள லயத்துடன் பாடல்களாக எழுதியுள்ளார். மேலும் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

            இன்பத்துப்பால் பாடல்களைக் குழந்தைப் பாடல்களாக எழுதியுள்ளார். ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியில் ‘வள்ளுவன் வாக்கு’ என்ற நிகழ்ச்சியையும் செய்துள்ளார். கம்பராமாயணத்தைக் குறள் வடிவில் கண்டுள்ளார். கவிச்சாரல், கவியமுதம், மகரவிளக்கு போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.

பிடித்த குறளும், அதிகாரமும்:

            திருக்குறளில் தொடர்ந்து தோய்ந்து வரும் இவர் வீஒவி குடும்பத்தில் இணைந்துள்ளார். இவருக்குப் பிடித்த குறளாக,

‘இன்னா செய்தாரை ஒறுத்தர் அவர்நாண

நன்னயம் செய்து விடல்’

            என்ற குறளைக் குறிப்பிடுகிறார்.

பிறர் தமக்குத் தீமை செய்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளும் பழக்கம் தன்னிடம் இயல்பாகவே அமைந்துள்ளதால் இக்குறள் தனக்கு மிகவும் பிடித்த குறள் என்று குறிப்பிடுகிறார்.

            ‘வான் சிறப்பு’ அதிகாரம் தனக்கு மிகவும் பிடித்த அதிகாரம் என்று குறிப்பிடுகிறார். ஏனெனில் வான் மழை இல்லையேல் எதுவும் இல்லை. உலகம் வாழ உதவும் மழையைப் பற்றிக் கூறும் ‘வான் சிறப்பு’ அதிகாரம் தனக்கு மிகவும் பிடித்தமான அதிகாரம் என்றும் குறிப்பிடுகிறார்.

சிறப்புகள்:

            திருக்குறளைப் பல கோணங்களில் கண்ட இவருக்கு அப்துல் கலாம் அவர்கள், வைரமுத்து அவர்கள், சாலமன் பாப்பையா அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் பாரதி, பாரதிதாசன் ஆகியோருக்காக நடத்தப்பட்ட விழாக்களிலும் சிறப்பு விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவர் இயற்றியவற்றுள் சில

ஒப்புரவறிதல்

‘மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.’

            திருவள்ளுவர் எழுதிய இக்குறளை மதுரை பாபா ராஜ் அவர்கள்,

“பிறருக் குதவுகின்ற பண்பாளர் செல்வம்

படர்ந்திருக்கும் பாகங்கள் எல்லாம் - நிறைவாய்

மருந்தாய்ப் பயன்படும் நல்ல மரம்போல்

பயன்படும் நாள்தோறும் பார்”

            இவ்வாறாக மாற்று வடிவம் கொடுத்துள்ளார்.

            இன்பத்துப்பால் பாடல்களைக் குழந்தைப் பாடல்களாக மதுரை பாபா ராஜ் அவர்கள் இயற்றியுள்ளார்.

ஊடலுவகை

‘ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்’.

            திருவள்ளுவர் இயற்றிய இக்குறளை,

‘என் உயிர்த்தோழி

கலையரசி

ஆறாவது படிக்கின்றாள்.

எழிலரசி நானோ

ஏழாவது படிக்கின்றேன்.

இருவரும் இணைபிரியாத தோழிகள்.

நட்பு என்ற முகத்தின்

இருவிழிகளே நாங்கள் தான்.

எங்களுக்குள் பொய்க்கோபம்,

செல்லச் சிணுங்கல், பழுப்பு

காண்பித்தல்

போன்ற குறும்புகளும் உண்டு.

பொய்க்கோபத்தில் ஆத்திரம்

கொண்டு விலகிச்செல்வோம்.

தணிந்தவுடன் மீண்டும்

சரிசரி மன்னிச்சுக்கோடி என்று

சேர்ந்து சிரிப்போம்.

நட்பிற்கு இன்பமே

செல்லச் சண்டைதான்.

பிரிந்து சேரும்பொழுது

அந்தச் சண்டைமீட்டுவதே

ஓர் இன்பராகந்தான்…

என்று குழந்தைப்பாடல்களாக புதிய நோக்கில் திருக்குறளை அணுகியுள்ளார்.

 

by Lakshmi G   on 21 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து
அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல்  பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல் பரிசளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள் ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள்
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.