LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

செல்போனை அதிகமாக பயன்படுத்துபவரா நீங்கள் ! உங்கள் உடல் நலத்தை பாதுகாக்க சில டிப்ஸ் !

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அனைத்து தகவல்களையும்  பெறுவதற்கு மொபைல் போன்கள் பயன்படுகின்றன. இதில் உள்ள கணக்கில் அடங்காத வசதிகளால் உலகமுழுவதும் உள்ள பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்  இந்த மொபைல் போன்களால் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட பலமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த வகை கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணிநேரத்திற்கு மேல் மொபைல் போன்களை உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். 


செல்போன்களை பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை :


1.ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.


2.தவிர்க்க முடியாத சூழ்நிலையில் செல் போன்களை உபயோகிங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.


3.குழந்தைகளிடம் செல்போன் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.


4.உங்கள் செல்போனில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.


5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.


6.உறங்கும் போது செல்போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.


7.நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.


8.கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.


9.செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.


10.செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

 

 

by Swathi   on 04 Feb 2013  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.