LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

ஞாபக சக்தியை அதிகரிக்கும் 10 உணவுகள் !!

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான பிரச்சனைகளுள் ஞாபக சக்தி குறைபாடும் ஒன்று. இதற்கு காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், போதிய சக்தியின்மையாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே ஆகும். இதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்து விடும். 


ஞபக சக்தி குறைபாடுகளுக்கு, சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணம் தான். எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவு வகைகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். இந்த கட்டுரையில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பத்து உணவு வகைகள் பற்றி இங்கு காண்போம்.


பால் உணவு பொருள்கள் 


பால் உணவு பொருள்களில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. இவை நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடுமட்டுமல்லாமல் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது. மேலும் வளரும் குழந்தைகளுக்கு பால் உணவு பொருள்கள் நல்ல ஒரு உடல் வளர்ச்சியைத் தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது.


தண்ணீர் 


மூளையில் 4/3 பங்கு தண்ணீர் உள்ளது. எனவே தண்ணீர் குறைவானால் மூளையில் செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும். எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.


ஒமேகா-3 உணவுகள் 


ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள உணவுகளான முழு கோதுமை தயாரிப்புகள், பழுப்பு அரிசி, ஓட்ஸ், சோயா பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், முட்டை, பால், தயிர், சீஸ், நட்ஸ், காய்கறி எண்ணெய்கள் முதலியன ஆகும். மேலும் ஆளி விதைகள் மற்றும் மீன் கூட ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவிற்கு நல்ல ஆதாரங்களாக இருக்கின்றன.


வல்லாரை 


வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து கொள்ளலாம். இக்கீரையை நிழலில் காயவைத்துப் பொடியாக்கி, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன், சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். வல்லாரை கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை மாத்திரைகளை பயன்படுத்தலாம். கேப்ஸ்ய்யூல்கள் பயன்படுத்த வேண்டாம்.


மிளகு, சீரகம் 


சமைக்கும் போது மிளகு சீரகம், ஆகியவை கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.


முட்டை 

மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை அதிகம் உண்பதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும். 


பாதாம் பருப்பு


தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கி  பருப்பை அரைத்து சாப்பிட வேண்டும். இதனால் நினைவாற்றல், அதிகரிப்பதோடு, மூளை நரம்புகள் வலுப்படும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் இருக்கிறது.


தேன் 


தேனில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு கரண்டி தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.


பச்சை இலைக் காய்கறிகள்  


பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.


தானிய வகைகள்


வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது. மேலும் வைட்டமின் பி அதிகம் இருப்பதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், உடலில் எல்லா பாகங்களும் சுறுசுறுப்பாக இருக்கும்.

by Swathi   on 22 Nov 2013  9 Comments
Tags: Memory Power   ஞாபக சக்தி   Increase Memory Power              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
ஞாபக சக்தி குறைபாடு உள்ளவரா நீங்கள்? ஞாபக சக்தி குறைபாடு உள்ளவரா நீங்கள்?
ஞாபக சக்தியை மேம்படுத்தும் வல்லாரை கீரை - ஒரு சிறப்பு பார்வை !! ஞாபக சக்தியை மேம்படுத்தும் வல்லாரை கீரை - ஒரு சிறப்பு பார்வை !!
பெண்களை விட ஆண்களுக்குத்தான் ஞாபக மறதி அதிகமாம் !! பெண்களை விட ஆண்களுக்குத்தான் ஞாபக மறதி அதிகமாம் !!
ஞாபக சக்தியை அதிகரிக்கும் 10 உணவுகள் !! ஞாபக சக்தியை அதிகரிக்கும் 10 உணவுகள் !!
அதிகமாக சாப்பிட்டால் ஞாபக சக்தி குறையுமா ! அதிகமாக சாப்பிட்டால் ஞாபக சக்தி குறையுமா !
கருத்துகள்
24-May-2018 02:39:31 Sangeetha said : Report Abuse
u have missed to say about walnut.which is more effective for Brain.
 
23-Mar-2018 13:04:01 P.Siva Vigneshwaran said : Report Abuse
Most useful to everyone. The concept is acceptable by everyone. It should be followed by most people to get the benefits and live the better life.
 
07-Oct-2017 06:54:34 Jiiva said : Report Abuse
Tks for your information
 
18-Jun-2017 10:58:54 baladevan said : Report Abuse
nice and usefully child to old man be Happy super
 
17-Dec-2016 05:04:50 G.D.RAMESH, said : Report Abuse
மிகவும் அற்புதமான கருத்துக்கள் உள்ள அக்க்ஷய வளைதலம் தான் வளைதமிழ்
 
23-Jul-2016 08:11:17 chinnathambi said : Report Abuse
லோ மெமரி பவர் .. உடல் சோர்வு என்ன போவ்ட் சாப்பிடலாம் sir
 
30-Nov-2014 10:06:58 Vijay said : Report Abuse
இ ரேஅது Question மனி times
 
20-Jul-2014 01:53:35 ஜ.sundaravadhanam said : Report Abuse
ரொம்ப நல்ல தகவல் இந்த உன்னவுகளை உண்டு ஞாபக அட்ட்ரலை வளர்த்துக்கொள்ளlam
 
28-Jan-2014 03:27:33 சிந்து said : Report Abuse
செண்ட் மீ ஹொவ் டு உஸ் தி ஒளிவீ ஆயில் போர் பாசே அண்ட் ஹேர்.அண்ட் அலசோ டெல் மீ தி பெனெபிட்ச் ஒப் ஒளிவீ ஆயில்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.